காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட தொழில் மையத்தில், வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்காக 25 பேருக்கு ரூ.88 லட்சத்து 44 ஆயிரம் கடனுதவிகளுக்கான மானியம் ரூ.22 லட்சத்து 11 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.